கொரோனோ தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு வரும் என்றும் பல வதந்திகள் புறப்படுகின்றன. தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு வராது என்றும் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். 

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து பேசியவர் 2,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் போதுமான அளவு உள்ளது. மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. 

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் பாதிப்பில்லை. 9 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்புள்ளது. மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.