தமிழ் திரை உலகின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா சிறந்த தயாரிப்பாளராகவும் நல்ல படைப்புகளை வழங்கி தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமல்லாமல் மனிதநேயமிக்க நல்ல மனிதனாகவும் தனது அகரம் பவுண்டேசன் சார்பாக பல நற்பணிகளை செய்து வருகிறார்.

முன்னதாக தனது அகரம் பவுண்டேசன் சார்பாக பல ஆயிரம் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வரும் நடிகர் சூர்யா தமிழக பள்ளி குழந்தைகள் மருத்துவர்கள் ஆகவேண்டும் என்ற கனவுகளை கேள்விக்குறியாகும் நீட் தேர்வுகளுக்கு எதிராக சரியான நேரங்களில் குரல் கொடுத்து எப்போதும் மாணவர்களுக்கு ஆதரவாக தான் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

அதேபோல் கடந்த ஆண்டில் (2021) நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலியாக தமிழக அரசு பல மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு அவர்களுக்கான நிலத்தை பட்டா செய்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய நற்பணியை நடிகர் சூர்யா செய்துள்ளார்.

வீடற்றவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் காவல்துறையினர் முன்னெடுத்த “காவல் கரங்கள்” அமைப்புக்கு நடிகர் சூர்யா 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய வாகனத்தை வழங்கியுள்ளார். வீடற்ற மக்களுக்கு என்ன ஒலிக்க நடிகர் சூர்யா வாகனம் வழங்கியதற்கு அனைவரும் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.