கூகுள் குட்டப்பா படத்தின் கலக்கலான சூர தேங்கா பாடல்!
By Anand S | Galatta | April 26, 2022 18:11 PM IST

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படம் வருகிற மே 6-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்யாவுடன் இணைந்து மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகி பாபு வேடத்தில் நடித்துள்ளனர். முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மலையாள திரையுலகலகில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் RK செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்திலிருந்து சூர தேங்கா பாடல் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியானது. கலகலப்பான சூர தேங்கா பாடல் லிரிக்கல் வீடியோ இதோ…