தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் அழகான திரைப்படங்களை வழங்கி வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய #AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். 

லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள காத்து வாக்குல காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தில் இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே டிக்கெட்டுகள் முன்பதிவில் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரன் டைம் தற்போது வெளியானது. காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.