பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டான நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக நகைச்சுவையை மையப்படுத்தி படங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் சந்தானம் நடிப்பில் விரைவில் திரைக்கு வர தயாராகி வரும் திரைப்படம் குலுகுலு.

மேயாத மான் மற்றும் ஆடை படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குலுகுலு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படமும் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியிருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் #SANTA15 படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடிக்கிறார். பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜனயா இசையமைக்க, இப்படத்தின் பாடல் பதிவு & இசை பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், #SANTA15 பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.