கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்  கூட்டுறவு வங்கியில் 12,110 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.


இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில்  இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணி மேற்க்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, ‘’பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இன்னும் 10- 15 நாட்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதும் வழங்கப்பட்டு விடும்.


திமுக ஆட்சியில் இருக்கும் போது மக்களை நேரில் வந்து சந்திக்காத ஸ்டாலின், இப்போது தேர்தல் நெருக்கும் நேரத்தில் ஊர் ஊராக சென்று சந்திக்கிறார். திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து நேரடி விவாதத்திற்கு அழைத்தால், வர மறுக்கிறார். வரும் தேர்தலிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். நல்லாட்சி தொடரும் “ என்றார்.