வீடியோ கான்பிரன்சிங் விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர் கேமரா ஆனில் இருப்பது தெரியாமல் பெண்ணிடம் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டதைகப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் தொழில் செய்ய வாழ்நாள் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் பெரும்பாலும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வந்தன. 

அத்துடன், கொரோனா தொற்றின் விகிதம் சற்றுத் குறையத் தொடங்கியதும், நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் தான், சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது, நீதிபதி ஒருவர் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருந்தார். 

அப்போது, வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆஜரான வழக்கறிஞர், தனது கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் அந்த வழக்கறிஞர் தன் அருகில் இருந்த ஒரு பெண்ணிடம், அத்து மீறி பாலியல் ரீதியில் நடந்துகொண்டிருக்கிறார்.

இப்படியாக, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அந்த வழக்கறிஞர் அந்த பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, சக வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், வழக்கறிஞரின் இந்த செயலை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த அந்த நீதிபதி, அப்படியே திகைத்துப்போய் நின்றார்.

இந்த காட்சிகளை, இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களே தங்களது செல்போனில் சிலர் பதிவு செய்தனர். அதில், ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட “வழக்கறிஞர் வாழ் முழுவதும் தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், “இது போன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்றும், சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவு” பிறப்பித்தனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.