தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகராகவும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மன்னன்னாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், VTV கணேஷ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலான வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் பீஸ்ட்-ல் தனது படப்பிடிப்பை முடித்த நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பபடுகிறது  

கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி & கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க , அனிருத் இசையமைக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. மாஸ்டர் திரைப்படத்தை XB FILM CREATORS சார்பில் தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோ தயாரித்தார். 

இந்நிலையில் விஜய்யின் உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல செல்போன் நிறுவனத்தின் விற்பனை தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது.