விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போல ரசிகர்களின் பேராதரவோடு விறுவிறுப்பாக, இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பிராஸ்ஸில் பாவனி, நிரூப், சிபி, வருண், அக்ஷரா மற்றும் பிரியங்கா ஆகியோர் எலெமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் தொடங்கியது.

போட்டியாளர்களும் பார்வையாளர்களும் வெகுவாக எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொள்ளும் ஃபிரீஸ் டாஸ்க் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அக்ஷராவின் சகோதரரும் தாயும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிபியின் தந்தையும் மனைவியும் வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய (டிசம்பர் 22)நிகழ்ச்சியில் ராஜுவின் மனைவியும் தாயாரும் வருகின்றனர். மேலும் நிரூப்பின் தந்தை வரும் ப்ரோமோ வீடியோக்கள் இன்று வெளியானது. இதன் தொடர்ச்சியாக சற்றுமுன் வெளியான புதிய ப்ரோமோ வீடியோவில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ளார். ட்ரண்டாகும் யாஷிகாவின் புதிய ப்ரோமோ இதோ…