தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் நடித்துள்ளார் அஜித்.

இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளது.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் தீம் பாடல்களில் ஒன்றான விசில் தீம் மியூசிக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பட்டையை கிளப்பும் இந்த தீம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்