தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடி பிரபலமடைந்த மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ், விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்று மக்களின் மனதில் இடம்பிடித்தார்.  

தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வரும் முகென் ராவ் அடுத்ததாக ஷீரடி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.முன்னதாக முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் வேலன்.

ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் ,இயக்குனர் கவின் இயக்கத்தில் முகென் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்க, பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி திரைக்கு வரும் வேலன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வேலன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. பிக் பாஸ் முகெனின் வேலன் பட கலக்கல் ட்ரைலர் இதோ...