தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாகவும் விளங்கிய நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக நகைச்சுவையை மையப்படுத்திய கதைக்களமாக தேர்ந்தெடுத்து வரிசையாக பல காமெடி என்டர்டெய்னர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரெயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி வரும் ஏஜன்ட் கண்ணாயிரம் படத்தில் கலக்கலான காமெடி துப்பறிவாளனாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக கடந்த நவம்பர் 19-ம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடித்த சபாபதி திரைப்படம் ரிலீசானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பபை பெற்ற சபாபதி படத்தை இயக்குனர் ஸ்ரீநிவாச ராவ் எழுதி இயக்கினார். சந்தானத்துடன் இணைந்து ப்ரீத்தி வர்மா, M.S.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, விஜய் டிவி புகழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

RK என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S. இசையில், பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ள, சபாபதி படத்திற்கு லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் சபாபதி திரைப்படத்தின் இடம்பெறாத DELETED SCENE தற்போது வெளியானது. அந்த DELETED SCENE இதோ...