சமுத்திரக்கனியின் ரைட்டர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | December 02, 2021 20:08 PM IST
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி அடுத்தடுத்து வரிசையாக,தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான்,ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்-2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்
மேலும், கதாநாயகனாக, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரு திரைப்படங்களுக்கும் தற்போது நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் வருகின்றன.
முன்னதாக இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் ரைட்டர். பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் 3-வது படைப்பாக தயாராகிறது ரைட்டர் திரைப்படம்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன், கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் மற்றும் Jetty புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வழங்கும் ரைட்டர் படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இநநிலையில் ரைட்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியானது. வருகிற டிசம்பர் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரைட்டர் திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Writer in theaters from Dec 24th! Next from @officialneelam! after a short break! Looking forward to your support! @thondankani @frankjacobbbb @doppratheep @editor_mani @GRfilmssg @PiiyushSingh @abhay_VMC @LRCF6204 @Tisaditi #Jettyproductions #Vickram_jaunter pic.twitter.com/xXFhwSTZf2
— pa.ranjith (@beemji) December 2, 2021