“நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம் 119 ஆபாச வீடியோக்‍கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை 9 கோடி ரூபாய்க்கு விற்க அவர் திட்டமிட்டிருந்ததாகவும்” மும்பை குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு  ஒரு மகன் ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இப்படியான அவர்களது வாழ்க்கைச் சூழலில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, “ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில்” மும்பை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

“ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை செல்போன் செயலியின் மூலமாக விநியோகம் செய்ததாகவும், இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்று மும்பை போலீசார் கடந்த ஜூலை 19 ஆம் தேதி கண்டுபிடித்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் மும்பை காவல் துறையினர் சுமார் 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

எனினும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அடுத்தடுத்து மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் ராஜ் குந்த்ரா வழக்கு பற்றி தகவல் தெரிவித்துள்ள மும்பை குற்றப் பிரிவு போலீசார், “ராஜ் குந்த்ராவின் செல்போன், லேப்டாப், ஹார்ட் டெஸ்க்குகள் ஆகியவற்றில் 119 ஆபாச வீடியோக்‍கள் இருந்ததாகவும், அந்த வீடியோக்களை 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும்” தகவல் கூறி உள்ளனர். இதனால், பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

முன்னதாக, “ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ பிசினஸ் செய்தது தனக்குத் தெரியாது” என்று, அவரது மனைவி நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்திருந்தார். 

மேலும், “எனது வேலையில் நான் பிசியாக இருந்ததால், என் கணவர் என்ன செய்கிறார் என்பதை நான் கவனிக்கவில்லை” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.