தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜஸ்பர் படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது. மேலும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட படங்களிலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்கள் கலந்து கொண்டு மிகுந்த பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் சீசன் 2-வின் ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தாவின் துள்ளலான பீட்ட ஏத்தி வீடியோ பாடல் தற்போது வெளியானது.

வசந்த் ராமசாமி தயாரிப்பில், ஈஷான் இயக்கத்தில் உருவாகியுள்ள பீட்ட ஏத்தி பாடலுக்கு அரிஷ் இசையமைக்க, பிரபல பாடகர் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். பி.கதர் சரஸ்வதி ஒளிப்பதிவில், மணி சந்திரா நடன இயக்கம் செய்துள்ள துள்ளலான பீட்ட ஏத்தி பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.