ஆங்கிலத்தில் உதவி கேட்ட ஏழை சிறுமியின் ஆசையை கட்டாயம் நிறைவேற்றுவேன் என நடிகர் அனுபம் கேர் உறுதியளித்துள்ளார்.

anupam பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுபம் கேர் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர். இவர் பல்வேறு மொழிகளிலும் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் தோன்றியுள்ளார்.

அனுபம் கேர் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் சிறந்த உறுதுணை நடிகர் என்று பெயர் பெற்றவர்.  இவரது மனைவி சண்டிகரிலிருந்து எம்.பி.யாகத் தேர்வான கிரோன் கேர்.  பாஜக கட்சியை சார்ந்த அனுபம் கேர் கொரோனா இறப்பு குறித்து மத்திய அரசுக்கு எதிராக கூறியிருந்த கருத்து வைரலாக பேசப்பட்டது. இவர் அனுபம் கேர் பவுண்டேசன் என்னும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.


அனுபம் கேர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார். அனுபம் கேர் படப்பிடிப்புக்காக அண்டை நாடான நேபாளத்தில் உள்ளார். தற்போது அனுபம் கெர் ஒரு வீடியோவை அவரு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிச்சை எடுக்கும் சிறுமி ஒருவர் அனுபம் கேரை நோக்கி அச்சிறுமி மிடுக்கான ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறார். 

அதற்கு அனுபம் கேர் , “ஏன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய்? நீ நன்றாக ஆங்கிலம் பேசுகிறாய். இதற்காகவே வேலை கிடைக்குமே” என்று கூறுகிறார். அதற்கு அச்சிறுமி  “இந்தியர் என்பதால் இங்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. இந்தியாவுக்கு போ என்று கூறுகிறார்கள்” என்று சிறுமி கூறினார். “பள்ளிக்குச் சென்று படிக்கிறாயா?” என்று கேட்டதற்கு, “பள்ளிக்குச் செல்ல மிகவும் விரும்புகிறேன். படித்தால் கண்டிப்பாக என் எதிர்காலம் மாறும். என் குடும்பத்தின் நிலை மாறும். படிப்பதற்கு உதவுமாறு அனைவரிடமும் கேட்பேன். ஆனால், யாரும் உதவுவது இல்லை” என்று அனுபம் கேர் கூறினார்.

அதனை தொடர்ந்து அவள் என்னிடம் கொஞ்சம் பணம் மற்றும் என்னுடன் ஒரு புகைப்படம் கேட்டாள். பின்னர் என்னிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள். அவளது கல்வி ஆர்வத்தைக் கண்டு வியந்தேன்! அனுபம் கேர் பவுண்டேஷன் அவள் படிப்பதை உறுதி செய்யும்" என அவரது வலைதளப்பாக்கத்தில் அனுபம் கேர் பதிவிட்டுள்ளார்.