ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரருக்கான ஆன்லைன் முன்பதிவானது பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கி உள்ள நிலையில், ஆர்ப்பரிக்கும் ஜல்லிக்கட்டு காளை அடக்க, இங்கே ஒரு வீர இளைஞர்களின் கூட்டமே காளைகளுக்கு மேல் ஆர்ப்பரிக்க காத்து தவம் கிடைக்கிறது என்று சொன்னால், அது மிகையல்லவே.

அதாவது, கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு முன்னதாக நேற்றைய தினம் அரசாணையை வெளியிட்டது.

ஆனால், அதற்கு முன்னதாகவே, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நேற்று முன் தினம் இரவு நடப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அதன்படி, மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரும் 15 ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. 

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நேற்று சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி” அளித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டது.

அதன்படி, மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கிறது. 

அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் “https://madurai.nic.in/” என்கிற இணையதளத்தில், பிற்பகல் 3 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, “ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் முன்பதிவு  செய்துகொள்ளலாம். இவற்றுடன், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் முன்பதிவும், இன்று பிற்பகல் 3 மணிக்கே தொடங்குகிறது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவற்றுடன், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னவென்றால், 

காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், 2 நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

- காளைகளுடன் அதன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி. 

- 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. 

- 2 நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

- ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாகும். 

- 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

- காளைகளை பதிவு செய்யும் பொழுது, அந்த காளையின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் அவசியம்.

- ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

- அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வட மாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த ஒத்துழைக்க வேண்டும்.

- எருது விடும் நிழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

- 150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி

- அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவீதம் என்கிற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.