தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது படங்கள் வெளியானால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் திருவிழா போல கொண்டாடுவார்கள்.இவர் நடிப்பில் கடைசியாக 2021 தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2019 பொங்கலுக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் பேட்ட.கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தினை இயக்கியிருப்பார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நவாஸுதீன் சித்திக்,விஜய் சேதுபதி,சசிகுமார்,சிம்ரன்,த்ரிஷா,மாளவிகா மோஹனன் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.இந்த படம் 2019 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வசூல் சாதனை நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் இந்த படம் ரிலீசாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை படத்தில் வைத்திருக்கலாமே என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.