குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்த ஒரு குரூப்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரளாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் பகுதியில், அரபு  நாட்டிலிருந்து வந்த ஒரு நபர், அந்த பகுதியில் உள்ள 5000 உயர் வகுப்பு குடும்பத்தினரை வைத்து, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பினை உருவாக்கி உள்ளார்.

அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் எல்லோரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களே அதிகம் உள்ளனர். அதிலும் குறிப்பாக, அதில் உள்ள பலரும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இருந்துள்ளனர்.

அப்போது, அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்கும் ஆண்கள் சிலர் தங்களின் மனைவியை மாற்றிக்கொண்டு அடிக்கடி உல்லாசமாக இருப்பார்கள் என்றும், அவர்களில் சிலர் அடிக்கடி ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு “நடக்க போகும் பார்ட்டிக்கு தங்களின் மனைவிகளை அழைத்து கொண்டு வந்து, எங்களைப் போல் நீங்களும் இப்படி குலுக்கள் முறையில் மாற்றி மாற்றி பாலியல் உறவு வைத்துக்கொண்டு உங்களது ஆசையை தீர்த்து கொள்ளுங்கள்” என்று கூர்வார்களாம்.

அதன்படி, இதில் கலந்து கொண்ட பல பெண்கள், வற்புறுத்தியே இப்படி தகாத முறையில் இப்படியான ஒரு செயலில் கணவர்களால் ஈடுபட வைக்கப்பட்டு உள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதன் காரணமாக, அந்த பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மனைவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த ஆட்ஸ்ஆப் குரூப் பற்றிய புகார்கள் மெல்ல வெளியே கசியத் தொடங்கிய நிலையில், இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அங்குள்ள காவல் நிலையத்தில் நேரில் சென்று “எனது கணவர் அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் வந்ததை வைத்து என்னை இப்படி தவறாக நடக்கச் சொல்லி என்னை கொடுமை படுத்துகிறார்” என்று, புகார் அளித்திருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இது குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த வாட்ஜ்ஆப் குரூப்பை பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதன்படி, பல குடும்ப பெண்களை அவர்களின் கணவர்கள் இப்படி பாலியல் ரீதியான டார்ச்சர் செய்ததும் தெரிய வந்தது.

இப்படியாக, மனைவிகளை மாற்றி மிகவும் மோசமான இந்த பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததை கண்டறிந்து போலீசார் அவர்களில் 6 பேரை முதலில் அதிரடியாக கைது செய்து உள்ளனர். தற்போது, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பலரையும் போலீசார் தீவிரமக தேடி வருகிறார்கள். இதனால், இந்த வழக்கில் இன்னும் பல பெரும் பணக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கிற தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.  

இந்த விசாரணையின் மூலம், இன்னும் பல ரகசியங்கள் வெளி வரும் என்றும், கோட்டையம் போலீசார் கூறியுள்ளனர். இச்சம்வம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.