ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அந்தாதுன். பல விருதுகளை வென்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கினார். அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். 

தபு கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்து விட்டு அதை பார்த்த ஹீரோவையும் தீர்த்துக் கட்டத் துடிக்கும் கதாபாத்திரத்தில் தபு நடித்தார். இந்நிலையில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

அந்தாதுன் படத்தை பொன்மகள் வந்தாள் பட புகழ் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். இந்த படத்திற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார். பிரசாந்த் பியானோ கலைஞராக நடிக்க வேண்டும். அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறாராம். படத்திற்காக 23 கிலோ உடல் எடையை பிரசாந்த் குறைந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. 

நடிகை சிம்ரனின் செகண்ட் இன்னிங்ஸ் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. சீமராஜா படத்தில் வில்லியாக மிரட்டியவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் அசத்தினார். இந்நிலையில் அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் அவர் நடிப்பிற்கு அதிகம் ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் கிடைத்துள்ளதால் ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.