பிரசவத்திற்கு முன்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் பிரசவத்திற்கு பின் , மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி ரொம்பவே தாமதமாக  ஏற்படுகிறது என்று இன்று நிறைய பெண்கள் கூற கேட்டு இருப்போம்.


பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரியாக ஏற்படுவது இல்லை. குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் அதிகமாகவே எடுத்துக்கொள்ளும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். 


சில பெண்களுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும். ஒவ்வொரு பெண்ணிற்கும் இது மாறுப்படும். இது இயல்பானதே இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


 மேலும் பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, குறைந்தாலோ மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும். உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லாலிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும் கூடும். அதனால்   பிரசவத்திற்கு பின் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சி சரி செய்ய முடியும்.


 மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதே பொருள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே சரி செய்துவிடலாம். ஆனால் பிரசவத்திற்கு பின் ஒரு வருடமாகியும் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.