அரசின் சேவைகளைப் பொதுமக்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதம் மத்திய மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம்.  2020-21 நிதியாண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையொட்டி வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக கொண்டு வர இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தேவையற்ற குழப்பங்கள், முகவரி மாற்றங்கள், பெயர் திருத்தங்கள், உள்ளிட்ட விவகாரங்களை எளிதாக செய்ய முடியும்.

பெரும்பாலும் வாக்காளர் அடையாள அட்டையில் தவறுகள் இருந்து வருகிறது. திருத்துங்கள் செய்து முறைகளில் சில சிமரங்கள் உள்ளது. பலருக்கு இந்த அடையாள அட்டை கிடைப்பதில் சிரமும் இருக்கிறது. இதனால் டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு நல்ல வரவேற்க கிடைத்து இருக்கிறது. 


எதை எவ்வாறு எளிமையாக செயல்படுத்த முடியும் என தேர்தல் ஆணைய குழு ஆய்வு செய்து வருகிறது. இதுக்குறித்து இறுதி முடிவு எடுத்த பிறகு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.