தமிழ் திரையுலகில் அனைவரும் விரும்பும் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஆர்யா. ஆர்யா இன்று தனது 40-வது பிறந்நதாளை கொண்டாடுகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. சார்பட்டா பரம்பரை குழுவினருடன் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பாக்ஸிங் ரிங் போன்ற கேக்கை வெட்டி சர்ப்ரைஸ் தந்துள்ளனர் படக்குழுவினர். 

நள்ளிரவில் நடந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆர்யாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்யாவை பார்த்து இன்ஸ்பையர் ஆகி ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளிங் செல்வதுமாக இருப்பவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இன்று ஆர்யாவின் பிறந்தநாள் என்பதால் நாக்-அவுட் கபிலனின் புதிய போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பா. ரஞ்சித். படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சமீபத்தில் ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை பட பணியை பார்வையிட்ட உலக நாயகன் கமல் ஹாசன், ஆர்யாவை வாழ்த்தினார். அன்றைய நாளை வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாள் என்று பதிவு செய்திருந்தார் ஆர்யா. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் ஆர்யா. அதே சமயம் அரண்மனை 3 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார் ஆர்யா. ஆர்யாவின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.