’’ பெண்களுக்கு  எதிரான இந்த அநியாயத்தை தட்டிக் கேட்டு, நீதி பெற்றுத் தர வேண்டியது அனைவரின் கடமை. ஆணாதிக்க எண்ணம் தான்  பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் பெருகிட காரணமாக அது அமைக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் மூலமாக அவர்களுக்கு வழங்கினால், ஆணுக்கு பெண் நிகர், சமம் என்ற நிலையை சமுதாயத்தில் அத்தனை நிலைகளிலும் கொண்டு வருகின்ற பொழுது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும்.  

அரசுக்கு 5 ஆண்டு பதவிகாலம் இருக்கின்ற நிலையில், ஏன் ஆண்கள் 2 1/2 வருடம், பெண்கள் 2 1/2 வருடம் இந்நாட்டை ஆளக்கூடாது? ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை அனைத்து நிலைகளிலும் கொண்டு வருகிற பொழுது,  சமம் என்ற நிலை இயல்பாகவே  உருவாக அமையும்” என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான பன்னாட்டு தின தொடர் கருத்தரங்கு நிறைவு நாள் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.


இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமாரும் , '' எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான். இந்த ஆட்சி அம்மா ஆட்சி , அதனால் அதிமுகாவில் பெண்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படும்'' என்றிருக்கிறார்.