தமிழகத்தில் புதிதாக 'மை இந்தியா கட்சி' நேற்று துவக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணி இல்லை; அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம்  என அக்கட்சியின் நிறுவன தலைவர் அனில்குமார் ஓஜா தெரிவித்தார்.


நாட்டின் முன்னணி நிறுவனமான எஸ்.எல்.ஓ. குழும நிர்வாக இயக்குனர் அனில் குமார் ஓஜா, புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். கட்சி பெயர் 'மை இந்தியா’. பிற கட்சிகளுடன் கூட்டணி இல்லை; அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம்  என்று இருக்கிறார், ‘போதும் போதும் ஏமாந்தது போதும்' என்ற கோஷத்தை முன்வைத்து தமிழகத்தில் தேர்தலை சந்திக்க உள்ளார். 


” தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மக்களின் அடிப்படை தேவைகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. அவர்களால் செய்ய முடியாததை 'மை இந்தியா கட்சி' ஆட்சிக்கு வந்தால் ஓராண்டில் செய்யும் என உறுதி அளிக்கிறோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் இலவசமாக்கப்படும். தமிழகத்தில் நடக்கவுள்ள தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மை இந்தியா கட்சி தனித்து போட்டியிடும். பிற கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. தமிழகத்தை உலகத்திலேயே சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம்” என்கிறார் அனில் குமார் ஓஜா.