சீரியல்கள் வீட்டில் இருப்பவர்களின் அன்றாட பொழுதுபோக்காக மாறிப்போனது.மக்களின் மனம் கவர்ந்து ஹிட் சீரியல்கள் பல உள்ளன.குறிப்பாக விஜய் டிவியின் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை சமீபகாலமாக பெற்று வருகின்றன.வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட குடும்ப தொடர்களை விஜய் டிவி தொடர்ந்து தயாரித்து வருகின்றனர்.

ஒரே சேனலில் இருக்கும் இரண்டு தொடர்கள் இணைந்து அவ்வப்போது மெகா சங்கமங்கள் சிலவற்றை சேனல்கள் ஒளிபரப்பும்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் இணைந்து மஹாசங்கமம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பொதுவாக மஹாசங்கமங்களை விறுவிறுப்பாக சில ஸ்பெஷல் என்ட்ரிகளை சேனல்கள் கொண்டுவருவார்கள் அப்படி இன்று ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா ராஜா ராணி தொடரின் மஹாசங்கமத்தில் பிக்பாஸ் தொடரில் கலக்கிய அர்ச்சனா,ரியோ,சம்யுக்தா,சோம் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினர்.

இன்றைய தொடரில் பிக் பாஸ் நட்சத்திரங்களை தொடர்ந்து குக் வித் கோமாளி பிரபலங்கள் இந்த தொடரின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர் என்ற தகவலை சீரியலில் தெரிவித்துள்ளனர்.குக் வித் கோமாளி பிரபலங்களின் வருகை சீரியலில் களைகட்ட போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.