கர்ணன் படத்தில் நடந்த பெரிய மாற்றம்...இயக்குனர் அறிக்கை !
By Aravind Selvam | Galatta | March 25, 2021 17:36 PM IST

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக 2019 பொங்கலுக்கு பட்டாஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன்,D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.ஜகமே தந்திரம்,கர்ணன் படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
கர்ணன் படத்தினை பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.ராஜீஷா விஜயன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு,கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் பண்டாரத்தி புராணம் என்ற பாடலின் தலைப்புக்கு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரவே அந்த பாடலை இனி மஞ்சணத்தி புராணம் என்று மாற்றுவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
#Karnan pic.twitter.com/aZHrMCbGa7
— Kalaippuli S Thanu (@theVcreations) March 25, 2021
New Romantic Video song from Keerthy Suresh's next film - Don't Miss!
25/03/2021 08:58 AM
Cook with Comali sensation Ashwin's new project - Colourful First Look released!
24/03/2021 07:11 PM