விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,காவியா அறிவுமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் ஒரு நாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் கதிர் என்ற குமரன்.இவர் கடந்த சில நாட்களாக கலந்துகொள்ளாமல் இருந்தார் குமரன்.இவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என்று சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.இவர் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் சில தகவல்கள் கிடைத்தன.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.மேலும் குமரன் விலகிய நிலையில் அவரது கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.

தற்போது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பதை உறுதிசெய்யும் வகையில் கடந்த சில நாட்களாக குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஷூட்டிங்கில் இருந்து சில வீடியோக்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வந்தார்.குமரன் விலகவில்லை என்ற தகவல் அறிந்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.