விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வைஷாலி தனிகா.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரின் மூலம் பிரபலமானவராக மாறினார் வைஷாலி தனிகா.இதனை தொடர்ந்து பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார் வைஷாலி தனிகா.

இவற்றை தவிர கதகளி,சர்கார்,பைரவா,ரெமோ,சீமராஜா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் சூப்பர்ஹிட் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகராசி தொடரில் நடித்து வந்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சமீபத்தில் இணைந்தார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் ஒன்று கோகுலத்தில் சீதை.இவர் நடித்து வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லாவே வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் வைஷாலி தனிகா.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

இவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கோகுலத்தில் சீதை தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் சென்று வருகிறது.இந்த தொடரில் ஒரு முக்கிய காட்சிக்காக செம ரிஸ்க் எடுத்துள்ளார் வைஷாலி தனிகா.இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)