சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார், சத்தமே இல்லாமல் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு உள்ளார்.

#IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக தீபக் சஹார் இருக்கிறார். இந்திய அணியிலும் கலக்கி வரும் தீபாக் சஹார், இந்த ஆண்டு நடைபெற்ற #IPL2021 சீசனில் காயம் காரணமாக, முழுவதுமாக அவர் விளையாட வில்லை. 

அதே நேரத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கி வந்த தீபக் சஹார், தனது காதலியிடம் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தியது பெரும் வைரலானது.

அதாவது, #IPL2021 ஆம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார், தனது காதலியான ஜெயா பரத்வாஜிடம், மண்டியிட்டு தனது காதலை அனைவர் முன்பும் அற்புதமாக வெளிப்படுத்தினார். 

இதனால், சர்ப்ரைஸ் ஆன ஜெயா பரத்வாஜ், தீபக் சஹாரின் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அங்கேயே கட்டியணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு இணையத்தில் அப்போது பெரும் வைரலானது.

தீபக் சாஹார்

அது முதலே தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ் இருவரும், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

இப்படியான நிலையில், தான், கால் மற்றும் முதுகுபகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக “இனி எப்போது இந்திய அணிக்கு தீபாக் சஹார் திரும்புவார்?” என்ற, கவலை எழுந்த நிலையில், இந்த சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பது போல அவரது திருமணம் நேற்று சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. 

அதன்படி, தீபக் சஹாரின் காதலியா ஜெயா பரத்வாஜ், டெல்லியில் உள்ள டெலிகாம் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். 

இந்த நிலையில் தான், இவர்களது இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று ஜூன் 1 ஆம் தேதி தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ் ஜோடி, தங்களது காதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று உள்ளனர். அவர்கள் இருவரும் முறைப்படி நேற்று திருமணம் செய்துகொண்டனர். 

அதன்படி, டெல்லி ஆக்ராவில் உள்ள ஜேபீ பேலஸ் என்ற பிரமாண்ட ஹோட்டல் முழுவதும் புக் செய்யப்பட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் வெளியே பெரும்பாலும் யாருக்கும் சொல்லாமல் சத்தமே இல்லாமல் நடத்தப்பட்டு இருக்கிறது. 

தற்போது இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள், இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.

மேலும், டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா ஹோட்டலில் இன்றைய தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்காக, ஒட்டுமொத்த ஹோட்டலும் புக் செய்யப்பட்டு உள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் என பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், முக்கியமாக தோனி, விராட் கோலி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.