மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் டொவினோ தாமஸ் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். முன்னதாக டொவினோ நடிப்பில் வெளிவந்த ஃபாரன்சிக் & மின்னல் முரளி ஆகிய திரைப்படங்கள் பிற மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து டொவினோ தாமஸ் நடித்துள்ள வாஷி திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், தற்போது இயக்குனர் கலீல் ரஹ்மான் இயக்கத்தில் தள்ளுமல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் டியர் ஃப்ரெண்ட்.

ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஆஷிக் உஸ்மான் புரோடக்சன்ஸ் சார்பில் சமீர் தாஹிர், சிஜு கலிட் மற்றும் ஆஷிக் உஸ்மான் இணைந்து தயாரித்துள்ள டியர் பிரண்ட்ஸ் திரைப்படத்தை இயக்குனர் வினித் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தக்ஷிணா ராஜேந்திரன், அர்ஜூன் லால் உடன் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சஞ்சனா நடராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீஜு கலித் ஒளிப்பதிவில் ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்திருக்கும் டியர் ஃப்ரெண்ட் படத்திற்கு தீபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.  முன்னதாக வெளிவந்த டியர் ஃப்ரெண்ட் படத்தின் டீஸர் பலரது கவனத்தையும் ஈர்த்தது.  இந்நிலையில் டொவினோ தாமஸின் டியர் ஃபிரெண்ட் திரைப்படம் வருகிற ஜூன் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.