பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட #IPL2022 இறுதிப் போட்டியில் #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, #GTகுஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று, கோப்பையையும் கைபற்றி உள்ளதுடன், இந்த #IPL2022 சீசனில் சிறந்த வீரர்களுக்கு பல்வேறு விருதுகளும் அளிக்கப்பட்டு உள்ளன. பல முக்கிய விருதுகளை இளம் வீரர்கள் பலரும் தட்டிச் சென்று உள்ளனர்.

இந்த போட்டியில், அறிமும் ஆன முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய #GT குஜராத் அணிக்கு முதல் பரிசாக 20 கோடி ரூபாயும், 2 வது இடம் பிடித்த #RR ராஜஸ்தான் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. 

அதே போல், 3 வது இடம் பிடித்த #RCB அணிக்கு 7 கோடி ரூபாயும், 4 வது இடம் பிடித்த லக்னோ அணிக்கு 6.5 கோடி ரூபாயும் கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த #IPL சீசன் தொடர் முழுவுதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆரஞ்சு கேப்

- அந்த வகையில், 15 வது #IPL சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை  #RR ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் தட்டி சென்றார். இந்த 15 வது #IPL சீசனில் ஒட்டுமொத்தமாக ஜாஸ் பட்லர் 863 ரன்கள் அடித்து விளாசி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்கள் சேர்த்த வீரரின் வரிசையில் ஜாஸ் பட்லர், 2 வது இடம் பிடித்து உள்ளார். இவற்றுடன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளையும் ஜாஸ் பட்லர் கைப்பற்றி அசத்தி உள்ளார்.

- குறிப்பாக, இந்த 15 வது #IPL சீசனில் ஒட்டு மொத்தமாக தொடரின் சிறந்த மதிப்பு மிக்க வீரர் விருது, ஜாஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது. 

ஊதா கேப் - பர்பிள் கேப்

- அதே போல், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை, #RR ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் பெற்றார். சஹால், இந்த  இந்த 15 வது #IPL சீசனில் மொத்தமாக 17 போட்டிகளில் விளைாயடி, 27 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார். 

சிறந்த கேட்ச்

- கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ வீரர் ஏவின் லீவிஸ் பிடித்த கேட்ச் சிறந்த கேட்ச் ஆக இந்த 15 வது #IPL சீசனில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 

- இந்த #IPL போட்டியில் அறத்துடன் விளையாடிய அணிக்கான விருதை ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டு உள்ளன.

சிறந்த பேட்டிங் ஸ்டிரைக்

- இந்த  #IPL சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் இந்த சீசனில் 183.33 ஆக இருந்து உள்ளது.

வளர்ந்து வரும் இளம் வீரர்

- மிக முக்கியமாக, இந்த 15 வது #IPL சீசனில் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது ஐதராபாத் அணியைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.