கள்ளக் காதல் ஜோடியை தாலிகட்ட வைத்த ஊர்மக்கள்! குழந்தைகளும், கணவனும் பரிதவிப்பு..

கள்ளக் காதல் ஜோடியை தாலிகட்ட வைத்த ஊர்மக்கள்! குழந்தைகளும், கணவனும் பரிதவிப்பு.. - Daily news

கள்ளக் காதல் ஜோடியை ஊர்மக்கள் சேர்ந்து  தாலிகட்ட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இருவரின் குழந்தைகளும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பரன் மாவட்டத்தில் சுகெளலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுசிலா தேவி முத்துராம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த சூழலில் தான், சுசிலா தேவியின் கணவர் மும்பையில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

சுசிலா தேவியின் கணவர், வேலை விசயமாக பெரும்பாலும் மும்பையிலேயே தங்கி இருந்து வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தான், அங்குள்ள லெளகாரியா கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராம் என்பவருடன் சுசிலா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வினோத் ராம், அந்த பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக் காதலாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

இப்படியாக, கடந்த 6 மாதங்களாக இவர்கள் இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தாருக்கிறார்கள். 

இந்த நிலையில் தான், கடந்த 26 ஆம் தேதி வியாழன் அன்று இரவு அந்த இளைஞன் சுகெளலி கிராமத்தில் உள்ள தனது கள்ளக் காதலியை பார்க்க சுசிலா தேவியின் வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்போது, அவர்கள் இருவரும் வீட்டின் கதவை மூடிக் கொண்டு உள்ளே இருந்திருக்கிறார்கள்.

அப்போது, வெகு நேரமாகியும் அவர்கள் கதவை திறக்காத நிலையில், இதை கவனித்து வந்த அந்த கிராம மக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து உள்ளனர். 

பின்னர், அவர்களை விடிய விடிய சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி உள்ளனர். அப்போது, காலையில் விடிந்ததும் அந்த இளைஞனின் குடும்பத்தினர் முன்னிலையில், அந்த பெண்ணின் கழுத்தில் அந்த நபரை, அந்த ஊர் மக்கள் சேர்ந்து தாலி கட்ட வைத்து உள்ளனர்.

அதன்படி, வேறு வழியில்லாமல் அந்த நபர் அந்த கள்ளக் காதலியான சுசிலா தேவிக்கு தாலி கட்டினார். அதன் பிறகு, அவர்கள் இருவரும் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

இதன் காரணமாக, சுசீலா தேவியின் கணவரான முத்துராமும், இவர்களது குழந்தைகளும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து போனார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment