“ஜோஸ் பட்லரை எனது 2 வது கணவராக ஏற்றுக் கொண்டேன்” என்று, ராஜஸ்தான் அணியில் உள்ள சக வீரரின் மனைவி கேலியாக பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

#IPL2022 சீசனில்  #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென் உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

இந்த #IPL2022 சீசனில், பட்லர் 16 போட்டிகளில் விளையாடி அதிக பட்சமாக 824 ரன்கள் எடுத்து, முதல் இடம் பிடித்து உள்ளார். இதில், 4 சந்தங்கள் அடங்கும். எனினும், அவருக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் நாளைய தினம் உள்ளது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், #IPL2022 ப்ளே ஆஃப் சுற்றில் பட்லரின் ருத்ர தாண்டவத்தால், #RCB ஆர்சிபியின் கோப்பைக் கனவுவை தகர்த்தி, கிட்டதட்ட 13 சீசன்களுக்குப் பிறகு #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டியில் நுழைந்து உள்ளது.

#RCB அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஜாஸ் பட்லர் 60 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் சதம் அடித்து அசத்தியதுடன், 106 ரன்கள் விளாசி தள்ளினார்.  #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெற்றிக்கு ஜாஸ் பட்லரே முக்கிய காரணமாக அமைந்தார்.

அத்துடன், ஏற்கனவே 3 சதங்களுடன் அதிக ரன்கள்கள் விளாசிஆரஞ்சு நிற தொப்பியை தன் வசம் வைத்து உள்ள பட்லர், நேற்றைய போட்டியிலும 59 பந்துகளில் சதம் அடித்து அசத்திக்காட்டினார்.

இந்த #IPL2022 சீசனில் ஒவ்வொரு முறையும் ஜாஸ் பட்லர் வானவேடிக்கை காட்டி அதிரடி காட்டும் போதெல்லாம், டி.வி.யில் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை அடையாளப்படுத்தி காட்டுவது தற்போது வாடிக்கையாக நடந்து வருகிறது. 

அப்படி #IPL2022 இந்த சீசனில் ஜாஸ் பட்லர் வானவேடிக்கை காட்டும் போதெல்லாம், கேமிராவில் சிக்குவது சகவீரர் ரஸ்ஸி வான் டெர் டசென்னின் மனைவியான லாராவாம் என்பவர் தான். 

இதனால், டி.வி.யில் பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், லாராவை, ஜோஸ் பட்லரின் மனைவி என்று தவறாக நினைத்து வந்திருக்கிறார்கள்.

அதாவது, டி.வி.யில் காட்டும் போதெல்லாம், #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ரஸ்ஸி வான் டெர் டசெனின் மனைவியான லாரா தான், ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஆதரவாக உற்சாக துள்ளலுடன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அதுவும், இந்த லாரா, ஐபிஎல் போட்டிகளில் #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும் போதெல்லாம், யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தன்ஸ்ரீ வர்மாவுடன் அமர்ந்து, #RR அணியை தொடர்ந்து கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்துவதை டி.வி.யில் அடிக்கடி பார்க்க முடியும்.

இந்த சூழலில் தான், நேற்றைய தினம் ஜாஸ் பட்லரின் பட்டாசன வானவேடிக்கைப் பார்த்து, #RR ராஜஸ்தான் ராயல்ஸ் போட்காஸ்டில் பேசிய லாரா, “ஜோஸ் பட்லரை எனது 2 வது கணவராக ஏற்றுக்கொண்டதாக” கேலியாக கிண்டல் அடித்து உள்ளார்.

“பட்லரின் மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த வாரம்  #IPL பயோ பப்பில் அவருடன் இணைந்தனர். 

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், இது குறித்து கிண்டலாக பேசிய லாரா, “நான் ஜோஸின் மனைவி என்று கிரிக்கெட் ரசிகர்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது, சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்று, கூறியுள்ளார்.

அத்துடன், “தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிகுதிக்கிறோம், எங்களால் எங்களையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், நான் அவரது குடும்பத்தின் ஒரு பகுதியாக நினைத்துக்கொண்டிருக்கலாம், இது மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது” என்றும், அவர் பேசி உள்ளார்.

“#RR வீரர் ரஸ்ஸி, இந்த  #IPL2022 சீசனில் அதிகமாக விளையாடாததால், அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை என்றும், இதனால் ஜோசுக்கான உற்சாகத்தை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு, அதை அனுபவிப்பேன்” என்றும், லாரா கூறியுள்ளார்.

RR ராஜஸ்தான் ராயல்ஸ் அனிக்காக 1 கோடி ரூபாய்காக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஸ்ஸி, இந்த சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே  விளையாடி இருக்கிறார். 

முக்கியமாக, #IPL2022 ப்ளே ஆஃப் சுற்றான 2 வது தகுதிச் சுற்றில் அவர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “ஜோஸ் பட்லரை எனது 2 வது கணவராக ஏற்றுக் கொண்டேன்” என்று, ராஜஸ்தான் அணியில் உள்ள சக வீரரின் மனைவி கேலியாக பேசியது இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.