#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றில் பட்லரின் ருத்ர தாண்டவத்தால், ஆர்சிபியின் கோப்பைக் கனவுவை தகர்த்தி, கிட்டதட்ட 13 சீசன்களுக்குப் பிறகு #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றின் இறுதி ஆட்டமானது “வாழ்வா? சாவா?” என்ற நிலையில், #RCB - #RR அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற #RR ராஜஸ்தான் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, #RCB அணி சார்பில் தொடக்க வீரர்களாக டு ப்ளெஸ்ஸி - கோலி ஜோடி களமிறங்கினர். இதில், #RR அணியின் பவுலர்கள் தொடக்கத்தில் இருந்தே மிக துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்ததால், #RCB பெங்களூருவின் பேட்ஸ்மேன்கள் அப்படியே நிலை குலைந்து போயினர். 

இதனால், விராட் கோலி 7 ரன்களுக்கும், கேப்டன் டூப்ளசிஸ் 25 ரன்களுக்கு அவுட்டாகி அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர். 

இதனையடுத்து வந்த ரஜத் பட்டிதார் மட்டும் தனி வீரராக மிக சீரான இடைவெளியில் ரன்களை குவித்துக்கொண்டு இருந்தார். எனினும், அவருடன் யாரும் சரியான பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

என்றாலும், சிறிது நேரம் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 24 ரன்களிலும், மஹிபால் லாம்ரோர் 8 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துக்கொண்டு இருந்தனர். 

என்றாலும் மற்றொரு புறம் தனி ஆளாக போராடி வந்த ரஜத் பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன்களை சேர்த்து அவுட்டானார். இதனால், #RCB அணியின் ரன் வேகம் அப்படியே தடைப்பட்டது. பின்னர் வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க #RCB அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், 158 என்ற மிக குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய #RR ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால் - பட்லர் ஜோடி களமிறங்கி துளியும் பதற்றமும் இன்றி செமயாக விளையாடி 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.

அதன்படி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 21 ரன்களுக்கு அவுட்டாக, களத்திற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களுக்கும், தேவ்தத் பட்டிக்கல் 9 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். என்றாலும், யாரை பற்றியும் கவலைப்படாத ஜாஸ் பட்லர், #RCB அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து வானவேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். 

ஜாஸ் பட்லர், 60 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் சதம் அடித்து அசத்தியதுடன், 106 ரன்கள் விளாசி தள்ளினார். 

இதன் காரணமாக, 18.1 ஓவர்களிலேயே #RR ராஜஸ்தான் அணி வெறும் 3 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை எளிதாகவே எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது.

இதனால், #IPL2022 தொடரின் குவாலிஃபையர் போட்டியில் #RCB அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில்,  #RR அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், கிட்டதட்ட 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நுழைந்து உள்ளது. 

அதே நேரத்தில், #RCB அணியானது வழக்கம்போல இந்த முறையும் கோப்பைக் கனவை, கனவாகவே மாற்றி, வெளியேறி உள்ளது.

இந்த போட்டியில் #RCB அணி தோல்வியடைந்ததற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது, போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தை டு ப்ளெஸ்ஸி சாதாரணமாக எடுத்துக்கொண்டது தான் முதல் தவறு என்று, சுட்டிக்காட்டப்படுகிறது. 

அதே போல், டாஸில் பேசியிருந்த அவர், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது முக்கிய தவராக பார்க்கப்படுகிறது. 

மிக முக்கியமாக போட்டியின் 11 வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தை, பட்லர் ட்ரைவ் ஷாட் ஆட முயன்றபோது, அந்த பந்து பேட்டில் எட்ஜாகி அழகாக கேட்ச் வந்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார். இந்த முதல் 3 முக்கிய தவறுகளுமே #RCB அணி தோல்வி அடைய காரணமாக அமைந்திருந்தன.

இந்த வெற்றியின் மூலமாக,  #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது #IPL2022 ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

அதன்படி, #IPL2022 சீசனின் இறுதிப்போட்டியானது வரும் 29 ஆம் தேதியன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

#IPL2022 சீசனின் இந்த இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.