சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் நாளை ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.  உலகநாயகனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

விக்ரம் திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் இணைந்து திரைக்கதை-வசனம் எழுதியுள்ளனர். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தை பார்த்து ரசித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “விக்ரம் சூப்பர்!! உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி!! இப்படி ஒரு திரைப்பட அனுபவத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், அனிருத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி!!  பிளாக் பஸ்டர் உறுதி! என விக்ரம் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அந்த விமர்சனம் இதோ…