தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.இதனை அடுத்து இவர் நடித்த அண்ணாத்தே,சர்க்காரு வாரிப்பாட்டா,சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்,நானி நடிக்கும் தசரா,டோவினோவுடன் வாஷி,உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் உள்ளிட்ட சில முன்னணி படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்கும் கீர்த்தி , தனி ஹீரோயினாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் நடித்துள்ள சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள கீர்த்தி , சமூகவலைத்தளங்களிலும் செம ஆக்டிவ் ஆக இருப்பார்.அவவ்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ரசிகர்களை பெற்று ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார் கீர்த்தி.அதிகம் பின்தொடரப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் டாப் 10 வரிசையில் இவர் வந்துள்ளார் இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.