இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராகவும் ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. ரசிகர்களின் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான வலிமை படம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. 

அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த வலிமை பட ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார். #AK61 திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

மேலும் #AK61 திரைப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் (ஏப்ரல்) தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்  #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சில வாரங்களுக்கு முன் அஜித் குமாரின் புதிய கெட்டப் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முழுக்க முழுக்க வெண் நிற தலை முடி மற்றும் தாடியுடன் இருக்கும் அஜித் குமாரின் அசத்தலான புதிய கெட்டப் #AK61 படத்திற்காக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. இந்நிலையில் விமான தளத்தில் ரசிகர்களுடன் அஜித்குமார் இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…