அனுபமா பரமேஸ்வரனின் கார்த்திகேயா 2 பட ஃபர்ஸ்ட்லுக் இதோ!
By Anand S | Galatta | June 01, 2022 22:17 PM IST

தென்னிந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்து இந்திய அளவில் மெகா ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த கொடி திரைப்படம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அடுத்தடுத்து மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக 18 Pages மற்றும் பட்டர்பிளை ஆகிய திரைப்படங்களில் தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார்.
இதனிடையே, இயக்குனர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நடிகர் நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் மிஸ்ட்ரி த்ரில்லர் படமான கார்த்திகேயா 2 திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் நிகில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கார்த்திகேயா திரைப்படத்தின் தொடர்ச்சியாக தயாராகியிருக்கும் கார்த்திகேயா 2 திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கார்த்திக் கட்டமனெனி ஒளிப்பதிவில் கால பைரவா இசையமைத்துள்ள கார்த்திகேயா 2 திரைப்படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திகேயா 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
#karthikeya2 🔥 pic.twitter.com/LTxR0qergr
— Anupama Parameswaran (@anupamahere) June 1, 2022
Atharvaa's Thalli Pogathey Official Trailer | Anupama Parameswaran
09/10/2020 03:29 PM
Official Trailer of Premam sensation Anupama Parameswaran's next film!
28/08/2020 05:50 PM