சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து தமிழ் திரை உலக ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் S.J.சூர்யா தற்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியுள்ளார். காவல்துறை அதிகாரியாக S.J.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் S.J.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.  சமீபத்தில் தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் படத்திலும் S.J.சூர்யா  நடிக்கவுள்ளார்.

முன்னதாக S.J.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் கடமையை செய் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் S.J.சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படமும் அடுத்து ரிலீஸாக தயாராகி வருகிறது. S.J.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. 

ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள பொம்மை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொம்மை திரைப்படத்தின்  ட்ரைலர் தற்போது வெளியானது.கவனத்தை ஈர்க்கும் பொம்மை திரைப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ட்ரெய்லர் இதோ…