சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது, பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளதால், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலாளர் கடிதம் அனுப்பி எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா என்னும் பேரலையானது, இந்தியா உட்பட ஒட்டு மொத்த உலகத்தையே திருப்பிப் போட்டது. உலகில் எப்படி கி.மு, கி.பி என்று ஒரு மைல் கல் வைத்து வரலாறுகள் வரையறுக்கப்பட்டதோ, அதே போல் தற்போது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று சமகால வரலாற்று நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, கொரோனா என்னும் கொடிய வைரசானது, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்குத் தொற்றாக பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ், முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது. 

இவற்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பியிருந்தது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன் படி, நாளோன்றுக்கு 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த தொற்று எண்ணிக்கையானது சுமார் 100 ஆக அதிகரித்து உள்ளத. 

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் 98 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், கொரோனா தொற்று குவியல்கள் corona cluster எண்ணிக்கையானது, தற்போது சற்று அதிகரித்து இருக்கிறது.

முக்கியமாக, தமிழகத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்கள் மட்டுமல்லாமல், மக்கள் அதிகம் பங்கேற்கும் விழாக்கள் போன்றவற்றிலும்  கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால், மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து தங்களது கவனத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதற்கான அறிகுறியாக இந்த நோய் பாதிப்பு அதிகரித்திப்பதை பார்க்க வேண்டும் என்றும். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றும், சுகாதார செயலர் வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதை, உறுதி செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளது என்றும், ஒமைக்ரான் வகை கொரோனாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியினால் பாதிக்காது என்பதையும் குறிக்கலாம்” என்றும், கூறியுள்ளார்.

மிக முக்கியமாக, “அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம்” என்றும், சுகாதார செயலர் வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, “கேரளா, மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவுகிறது என்றும், அதன் படி, அண்ணா பல்கலையில் 23 பெருக்கு கொரோனா தொற்று உள்ளது” என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.