யார் மறந்தாலும் தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என  திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கூறினார்.


மேலும் அவர், ‘’ துணை முதல்வர் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. சென்னையில் ஒருநாள்  ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். பின்னர் அம்மா மரணத்தில் மர்மம் இருக்குனு சொல்லி, தர்மயுத்தம் செய்தார். பிறகு முதலமைச்சர் பழனிசாமி கூப்பிட்டு துணை முதல்வர் கொடுப்பதாக சொன்ன உடன் அதை மறந்துவிட்டார்.கடந்த 10 வருடத்துல யாருக்காவது வேலை கிடைச்சதா? இல்ல தி.மு.க ஆட்சி அமைந்ததும் தொழிறிற்சாலைகள் உருவாக்கப்படும். வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

காலியாக இருக்கக்கூடிய 3,50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். போடி பகுதியில் மாம்பழ கூழ் தொபோடி தொகுதியில் எந்த திட்டங்களையும் ஓ.பழனிசாமி கொண்டு வரவில்லை. சங்கராபுரம் அருகே சிட்கோவிற்கு அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த ஆட்சி வெறும் அடிக்கல் மட்டும் நாட்டுகிற ஆட்சியாகவே இருக்கிறது. தொழிற்சாலை செயல்படுத்தவில்லை. இங்கு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி தர வேண்டிய துணை முதலமைச்சர் இருந்த 2 தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து , மக்களவையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் விவசாய சட்ட மசோதாவிற்கு ஆதரித்து வாக்களித்த ஒரே எம்.பி உங்கள் தொகுதி எம்.பி தான். இந்த இரு சட்டத்தையும் ஆதரித்து 3 மாதங்களுக்கு முன் வாக்களித்த அ.தி.மு.க, தற்போது தேர்தல் வந்ததால் அந்த சட்டங்களை எதிர்ப்பதாக பிரச்சாரம் செய்தி நாடகம் ஆடுகிறார்கள்.


பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, எனக்கு இன்னொரு முகம் இருக்குனு சொல்றாரு. அண்ணாமலை என்றால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல. செந்தில் பாலஜிய அடிச்சிருவேனு சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கைவச்சிபாரு தம்பி. இது தமிழ்நாடு. திமுக  உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசணும். ” என்று பேசினார்.