தி.மு.கவுக்கு ஓட்டுப்போடாவிட்டால் மக்களின் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று மக்களை மிரட்டும் வகையில் பேசிய திமுக வேட்பாளர் ஐயப்பன் பேசியுள்ளது சர்ச்சையாய் கிளம்பியுள்ளது. 

மேலும் பிரச்சாரத்தின் போது பேசிய ஐயப்பன், ‘கடலூர் மக்களுக்குக் கேரள மந்திரவாதிகள் மூலமாகச் சூனியம் வைத்துள்ளதாகவும், திமுகவுக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்றும் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார். விருப்பப்பட்டு யார் பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றும் ஆனால் உதயசூரியனுக்கு வாக்களித்துவிட்டு அதனைச் செலவு செய்யுங்கள் எனவும் பேசியுள்ளார்.

வாக்களிக்கவில்லை என்றால் மக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று தேர்தல் பிரசாரத்தில் சொல்வது வேட்பாளரோட மாண்பு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.