294 தொகுதிகளுக்கான மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுமார் 100 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  


மம்தா பானர்ஜி பெண்களுக்கு மம்தா முக்கியத்துவம் வழங்குவது இது முதல்முறை அல்ல. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 41 சதவிகித இடங்களை பெண்களுக்கு வழங்கினார். 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து காலியான மாநிலங்களவையின் நான்கு இடங்களில் இரண்டு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினார்.

நாடாளுமன்றத்தில் நாட்டிலேயே  தற்போது மொத்த வேட்பாளர்களில் 30 சதவிகிதம் பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட வைக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார். 


மேற்கு வங்கத்தில் 48.5 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதால்தான் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் மேற்கு வங்கத்தில் கொடுக்கப்படுகிறது என்ற விமர்சனம் இருந்தாலும்கூட மேற்கு வங்கத்தில் உயர் பதவிகளில் பெண்கள்தான் உள்ளனர்.

மேலும் கட்சியில் இருந்த முக்கிய எம்.எல்.ஏகள் பாஜகவில் இணைந்த பிறகு இக்கட்டான நிலையில் இருக்கும் மம்தாவுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியும் தீவிரமாக மம்தாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் "உங்கள் வாக்கு வங்கத்தின் மகளான எனக்கே" என்று பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.