தமிழ் திரையுலகில் புதிதாய் கால் பதித்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராக்கி. இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தின் கதைக்கரு, படத்தில் நடித்திருக்கும் பாத்திரங்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவியது. அடுத்து எந்த மாதிரி படத்தை இயக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் சாணிக் காயிதம். இந்த படத்தில் நடிகராக களமிறங்குகிறார் செல்வராகவன். அவர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகிவிட்டாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. கடந்த வாரம் பிப்ரவரி 26-ம் தேதி சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாள் இணையத்தில் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். செல்வாவின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இந்த படத்திற்கு யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.