டியூஷனுக்கு வந்த 14 வயதான மாணவியை பாஸ் போடுறேன்னு சொல்லி, ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் நவி மும்பையில் அமைந்து உள்ள நேருல் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நேருல் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி, படிப்பில் அதிகம் நாட்டமில்லாமல் விளையாட்டுத் தனமாக இருந்ததாகத் தெரிகிறது.

இதனால், தினமும் அந்த மாணவி வகுப்பில் ஆசிரியரிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருந்து உள்ளார்.

இப்படியாக, அந்த 14 வயது மாணவி சரியாகப் படிக்காத காரணத்தால், “பாஸ் ஆவது கடினம்” என்று கூறி, 48 வயதான அவரின் வகுப்பு ஆசிரியர் தன்னிடம் டியூஷனுக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த மாணவி தன்னுடைய வீட்டில் இந்த டியூஷன் விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். இதனால், சிறுமியின் பெற்றோரும் தங்களது மகள் டியூஷன் செல்ல அனுமதி அளித்து உள்ளனர்.

அத்துடன், “தனது வகுப்பு ஆசிரியரிடமே நாம் டியூஷனுக்கு போவதால், நம்மை அவர் எப்படியும் பாஸ் போட்டு விடுவார்” என்று, அந்த மாணவி எண்ணிக்கொண்டு இருந்து உள்ளார். அதன்படியே, அந்த ஆசிரியரும் அந்த மாணவியிடம் பேசி வற்புறுத்தி வரச்சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த ஆசிரியருக்கு அந்த 8 ஆம் வகுப்பு மாணவி மீது திடீரென்று ஆசை வந்து, அது சபலமாக மாறியிருக்கிறது. இதனால், அந்த 14 வயது மாணவியைத் தினமும் தொட்டுத் தொட்டு பாடம் நடத்தி வந்திருக்கிறார்.

அந்த ஆசிரியர் தொடும் போதெல்லாம், அந்த மாணவிக்கு அவரின் இந்த அறுவறுப்பான செயலால் மிகவும் மனம் நொந்து தினம் தினம் வேதனைப்பட்டு வந்து உள்ளார். 

அத்துடன், டியூஷன் வராமல் நின்று விட்டால், ஆசிரியர் தம்மை பாஸ் ஆக்கமாட்டார் என்ற பயத்தின் காரணமாகவே, அவர் அன்றாடம் டியூஷனுக்கு வந்து உள்ளார்.

இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசிரியர், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி, உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் இது பற்றிக் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அந்த ஆசிரியர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டது. அதன் படி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.