இந்தியாவில் வாழக் கூடிய நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 4 ஆம் இடம் கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் சேலம், வேலூர், திருச்சி, கோவை நகரங்களும் 
இடம் பெற்றுள்ளன. 

மக்களாட்சி நாடானா இந்தியா, இன்று வளரும் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பொருளாதாரம், மனித வளம், தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு குறியீடுகளால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்து, தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் திகழ்ந்துகொண்டு இருக்கிறது.  

இப்படியாக, மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டு இருக்கும் இந்தியாவில் வாழ மிக ஏற்ற நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னதாக வெளியிட்டார். 

இந்த பட்டியலானது, 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கும் நகரங்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் குறைவானோர் வசிக்கும் நகரங்கள் என 2 வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 

அதன் படி, வாழ்வதற்கு எளிமையான நகரங்களின் பட்டியலில் 2020 (EoLI 2020) என்ற தலைப்பில், இந்த பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளன. 

இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் நகரங்கள் பட்டியல் மொத்தம் 49 நகரங்கள் இடம் பெற்று உள்ளன. 

அதில், கிட்டத்தட்ட 5 கோடி நகரங்கள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவிலேயே வாழக்கூடிய மிக சிறந்த நகரமாக, புனேவை 2 வது இடத்திற்குத் தள்ளி, பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

பட்டியலில், புனே நகரம் 2 ஆம் இடத்தையும், அகமதாபாத் நகரம் 3 ஆம் இடத்தையும், தமிழகத்தின் தலைநகரான சென்னை 4 ஆம் இடத்தையும் பிடித்து உள்ளன. 

அத்துடன், சூரத் 5 ஆம் இடத்தையும், நவி மும்பை 6 ஆம் இடத்தையும், கோவை 7 ஆம் இடத்தையும், வதோதரா 8 ஆம் இடத்தையும், இந்தூர் 9 ஆம் இடத்தையும், பெருநகரமான மும்பை பட்டியலில் 10 ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 

அதே போல், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலானது மொத்தம் 62 நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. 

அதன் படி, 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழும் 62 நகரங்களின் பட்டியில் ஷிம்லா முதலிடம் பிடித்து உள்ளது.

இதில், புவனேஷ்வர் 2 வது இடமும், சில்வாஸா 3 வது இடமும், காக்கிநாடா 4 வது இடமும், சேலம் 5 வது இடமும் பிடித்துள்ளன.

அதே போல், 6 வேலூர் நகரமும், 7 வது இடத்தில் காந்தி நகரும், 8 வது இடத்தில் குரு கிராமும், 9 வது இடத்தில் தேவநகரும், 10 வது இடத்தில் திருச்சியும் இடம் பெற்று உள்ளன.

இந்த பட்டியலானது வாழ்க்கைத் தரம், நகரங்களின் பொருளாதாரத் திறன், நிலையான வளர்ச்சி, இன்னல்களிலிருந்து மீண்டெழுவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.