பிரசவத்துக்கு வந்த பெண்ணை மருத்துவமனை வார்டு பாய் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் பகுதியில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில், அதே பகுதியைச் சேர்ந்த 28 
வயதான இளம் பெண் ஒருவர், கடந்த வாரத்திற்கு முன்பு இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த வாரம், இந்த பெண்ணுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நாட்களில் குழந்தை பெற்றெடுத்த இந்த பெண்ணுக்கு கொரானா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அந்த பெண்ணுக்குக் கொரானா பாசிட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது.

இதன் காரணமாக, அந்த பெண்ணை அந்த மருத்துவமனையில் இருக்கும் கொரானா சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டார். அதன் படி, அந்த பெண் அங்குள்ள லால் சவுக்கி பகுதியில் இருக்கும் கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கா சேர்த்தார். 

அப்போது, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணின் மீது, அந்த மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றும் ஸ்ரீகாந்த் மொஹைட், என்பவருக்கு ஒரு கண் இருந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் மீது நாளுக்கு நாள் அவருக்கு ஆசை அதிகரித்துக் காணப்பட்டு உள்ளது.

இதனால், அவர் அந்த பெண் இருக்கும் வார்டுக்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை அவர் நோட்டமிட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு அன்று, அந்த பெண் வழக்கம் போல் தனது இருக்கையில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணிருக்கும் வார்டுக்குள் வந்த அந்த வார்டு பாய், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அந்த பெண், திடீரென்று கண் விழித்துப் பார்த்து அலறி துடித்து உள்ளார்.

இதனையடுத்து. அந்த வார்டு பாய், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, பயந்து போன அந்த பெண், இது குறித்து உடனடியாக தனது கணவருக்குத் தெரியப்படுத்தினார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வார்டு பாய் ஸ்ரீகாந்த் மொஹைட் அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.