சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. சினிமாவில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் கொண்டாடிய சமந்தா தனது ரசிகர்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்கு வெர்ஷன் படங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை சமந்தா. சமீபத்தில் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ரெண்டு காதல் பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதமே அதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சமந்தா வில்லியாக இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்ற சரங்கதரியா பாடலை சமந்தா வெளியிட்டார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்த்து அசந்துப் போன சமந்தா சாய் பல்லவியை வாயாற பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகை சமந்தா, சிறு வயதில் இருந்து தான் தங்கியிருந்த பல்லாவரம் நினைவுகளையும், தனது முதல் காதல் பிரேக்கப் ஆனது குறித்தும் கூறி சமீபத்தில் பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், தற்போது பந்தின் மேல் முட்டிப் போட்டு கீழே விழாமல் பேலன்ஸ் பண்ணி நிற்கும் மிகவும் கடினமான ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை போட்டு தனது ரசிகர்களை மிரள வைத்துள்ளார் நடிகை சமந்தா.