அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 6,000-க்கும் அதிகமான அரசு, தனியார் துறை தலைவர்கள் பங்கேற்று, சர்வதேச அளவில் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படும்.

2021ம் ஆண்டிற்கான விருது விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது இன்று வழங்கப்பட உள்ளது.


பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்படுவது குறித்து செராவீக் 2021 எரிசக்தி மாநாடு , ‘’ 50 கோடி இந்தியர்கள் பயன் அடையும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம், இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம், 18,000 குக்கிராமங்களுக்கு மின்சார வசதி, ஏழை குடும்பங்களுக்கு 1.25 கோடி வீடுகள், விவசாயிகளுக்கு நிதியுதவி, மின்னணு வேளாண் சந்தை, தூய்மை இந்தியா திட்டம், அமைப்புசாரா துறையை சேர்ந்த 42 கோடி பேர் பயன் அடையும் வகையில் ஓய்வூதிய திட்டம், மேலும் சர்வதேச எரிசக்தி உற்பத்திக் கூடமாக இந்தியா மாறியுள்ளது.”

இதனை பாராட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது இன்று வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.